அம்பாறை, அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் கோமாரி பகுதியில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 57 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கெப்பட்டிபொல பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற பேருந்தொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில ்உயிரிழந்தவர், வெலிமடை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரென காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பொத்துவில் மற்றும் திருக்கோவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



















