யுக்ரைனின் 14 பிராந்தியங்கள் மீது ரஸ்யா ஒரே இரவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் தலைநகரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளடங்குகின்றன.
இந்த தாக்குதல்களின்போது தெற்கு சபோரிஜியா பகுதியில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.
சிறுவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்களின்போது ரஸ்யா கிட்டத்தட்ட 540 ஆளில்லா விமானங்களையும் 45 ஏவுகணைகளை ஏவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து, ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தாக்குதலின் அனைத்து இலக்குகளும் அடையப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
எனினும் தாக்குதல்களின் விளைவு குறித்து யுக்ரைனின் உத்தியோகபூர்வ கருத்து இன்னும் வெளியாகவில்லை.




















