மஹரகம, பமுனுகம பகுதியில் உள்ள ஒரு வெதுப்பகத்தை, பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் கடந்த 29 ஆம் திகதி சோதனை செய்தனர்.
இதன்போது 9 குற்றச்சாட்டுகளின் பேரில் வெதுப்பக உரிமையாளரை கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
வெதுப்பக உரிமையாளருக்கு 45,000 அபராதமும், இரண்டு வாரத்திற்கு வெதுப்பகத்தை மூடவும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டது.
மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி, மஹரகம நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பமுனுகம சுகாதார பரிசோதகர்களால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.



















