மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கபப்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி திரு மிஹால் தலைமையில் எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் குற்றத்தின் பாரதூர தன்மையை கருத்திற்கு கொண்டு சந்தேக நபருக்கு எதிராக குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது எதிரி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வாவுடன் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் ஆஜராகி இருந்தனர். வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி இருந்தார்.
இதன்போது குறித்த நபர்மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




















