கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.



















