ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்களான ‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘கமாண்டோ சலிந்த’ ஆகியோருக்கு துப்பாக்கிகளை விற்றதாகக் கூறப்படும் இராணுவ லெப்டினன்ட் கேர்ணலை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ.வுட்லர் இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















