முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது.
கடந்த அரசாங்க காலத்தில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்து, அதன்மூலம் அரச நிதி மோசடி மற்றும் தவறான பயன்பாடு இடம்பெற்றதாக எதிராக ரம்புக்வெல்ல உள்லிட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அது தொடர்பிலான வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடரப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.



















