மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (16) இரவு முதல் பெய்து வரும் கனமழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன்-நுவரெலியா மற்றும் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதிகளிலும், கிளை வீதிகளிலும் அடர்ந்த மூடுபனி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதிகளில் வாகனம் செலுத்தும்போது, முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து, மெதுவாகவும் கவனமாகவும் வாகனங்களை இயக்குமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.




















