நாட்டின் வடக்கு கடற்பகுதியில் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் மாமுனை கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியை சோதனைக்கு உட்படுத்தியபோது அதில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
33 கிலோகிராமிற்கும் அதிகளவான கேரள கஞ்சா இதன்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



















