இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரியின் தங்கக் கடத்தல் முயற்சியை இலங்கை சுங்கத்துறை முறியடித்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்று(18) இலங்கை விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் தங்கக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் இலங்கை விமானப்படையில் 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 37 வயதானவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்கே நபர் பணியாளர் நுழைவாயில் வழியாக வருகை முனையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பின்னர் அவர் உடல் ஸ்கேனர் மூலம் பரிசோதித்தபோது, அவரது இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 24 கரட் தூய்மையான 40 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் பெறுமதி ரூ.20 மில்லியன் ஆகும். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



















