எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனத்தை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரி, கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் (CIABOC) எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பட்டியலை கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் வருண தீப்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அதன்படி, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர இந்தப் பட்டியலை கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார்.
இருப்பினும், குறித்த ஆணைக்குழு, தனது வலைத்தளத்தில் டிஜிட்டல் வடிவத்தில் பிரகடனத்தைக் காண்பிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, சஜித் பிரேமதாச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளாதாக தெரிவித்துள்ளர்.



















