ஹபரணை, தம்புள்ள நகரில் இன்று (22) நடத்தப்பட்ட சோதனையின் போது போலி ரூ. 1,000 நாணயத்தாள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஹபரணை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புள்ளயைச் சேர்ந்த 32 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
போலி ரூ. 1,000 நாணயத்தாள் மாற்றுவதற்காக தம்புள்ளயிலுள்ள ஒரு கடைக்குச் சென்றபோது கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 23 ஆம் திகதி கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
ஹபரணை காவல்நிலைய பொறுப்பதிகாரி பாலித இளங்கசேகரவின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறை அதிகாரிகள் குழு இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




















