மனித – யானை மோதல் சம்பவங்கள் தற்போது அதிகரித்தவண்ணம் உள்ளன.
இதற்கு மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், அரசாங்கம் மின்வேலிகளை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
எனினும், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று பயிர்ச்செய்கைகளுக்கு மாத்திரமின்றி மக்களது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில், மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமது விவசாய நிலங்களும், பயிர்களும் யானைகளால் அழிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.



















