எத்திமலை பொலிஸ் பிரிவில் டோசர் ஏரியில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக எத்திமலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் எத்திமலை வாவி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என ஆரம்பக கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை எத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




















