காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களிலிருந்து பல கப்பல்களை இஸ்ரேலிய இராணுவம் தடுத்து நிறுத்தி, அதிலிருந்த பல ஆர்வலர்களைக் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
44 கப்பல்கள் மற்றும் சுமார் 500 ஆர்வலர்களைக் கொண்ட குளோபல் சுமுத் புளோட்டிலாவிலிருந்து குறைந்தது மூன்று கப்பல்கள், காசா கடற்கரையிலிருந்து சுமார் 70 கடல் மைல்கள் (130 கி.மீ) தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதன்போது ஸ்வீடிஷ் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் “பல கப்பல்கள்” பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு, அவற்றின் பயணிகள் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு மாற்றப்படுகிறார்கள் என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.




















