நாட்டில் நிலவும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல மாணவர் விடுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மறு அறிவித்தல் வரும் வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கை
விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் பற்றிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
வெள்ளநிலை மேலும் மோசமடையாதபடி கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.



















