விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்தில் உயிர்நீத்த விமானியின் பெயர் வரலாற்றில் பேசப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட அவர்,
விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரை செலுத்திய உயிரிழந்த விமானியின் பெயர் வரலாற்றில் எழுதப்படும்.
மக்களின் உயிரை காப்பாற்றும் நோக்கத்தில் அவர் விமானத்தை செலுத்தி உயிரை இழந்துள்ளார்.
மேலும், சுன்டிக்குளத்தில் 5 கடற்படை வீரர்கள் உயிர்துறந்துள்ளனர்.
குறித்த 5 பேரும் காணமல் போயுள்ளனர். இதனை வடக்கு அரசியல்வாதிகள் புரிந்துக்கொள்ளவேண்டும்” என கூறியுள்ளார்.



















