யாழ் இயக்கச்சிப் பிரதேசத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் தயாராகும் ஒரு சொர்க்கம் என்றுதான் ‘றீ(ச்)ஷா’ ஒருங்கிணைந்த பண்ணையைக் கூறவேண்டும்.
இயற்றை எழில் மிகுந்த தோற்றங்களையும், சூழலையும் அதனோடிணைந்த பண்ணையின் செயற்பாடுகளையும் நகரவாழ் மக்கள் அனுபவிக்கும் வகையிலான ஒரு வித்தியாசமான சுற்றுலா மையம்தான் இந்த றீ(ச்)ஷா’ ஒருங்கிணைந்த பண்ணை.
குதிரை, முயல் போன்ற பிராணிகளை தொட்டுப்பார்க்கும் அனுபவம்.. கோழிக்குஞ்சுகளை துரத்திப் பிடிக்கும் அனுபவம்.. பன்றிக்கூட்டத்தை கிட்டவே கண்டுகளிக்கவும், குளத்தருகே தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் அனுபவம்….. தென்னங் கன்றுகளினுடாக ஓடி.. சந்தனமரச் சோலைகளில் தனித்திருக்கவும், இயற்கை விளையாட்டு வெளியில் விளையாடி மகிழ்ந்திருக்கவும்..- இப்படி பல தசாப்தங்களுக்கு முன்னர் தமிழ் மக்களின் வாழ்க்கையின் விழுமியங்களை மீட்டுப் பார்க்கும் வகையிலான பல ஏற்பாடுகளைத் தனதாகக் கொண்ட ஒரு பண்ணைதான் இந்த ‘றீ(ச்)ஷா’ ஒருங்கிணைந்த பண்ணை.
150 ஏக்கர் பண்ணையை சுற்றிப் பார்த்து அனுபவிக்க வசதியாக பண்ணை முழுவதும் பயணம் செய்யக்கூடிய பாதைகள், பாலங்கள், சக்கர நாற்காலி பயணம் செய்யக்கூடிய வகையிலான வசதிகள் என்று பல விடயங்களை பார்த்துப் பார்த்து செய்துவருகின்ற நிர்வாகத்தினர், தற்போதைய கோவிட் பெருந்தொற்றை கனத்தில் எடுத்து, சமூக இளைவெளி உட்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார்கள்.
எமது அடுத்த தலைமுறையினரின் கனவு தேசமாக, மறக்க முடியாத ஒரு சொர்க்கமாக இந்த ‘றீ(ச்)ஷா’ ஒருங்கிணைந்த பண்ணை இருக்கும் என்பதை கீழே உள்ள காட்சிகளைப் பார்க்கின்ற போது உங்களுக்கு தெளிவாகப் புலப்படும்: