பாடசாலைகளை மீள திறப்பது குறித்து அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று காலை இடம்பெற்ற கோவிட் தடுப்பு செயற்குழுவின் கூட்டத்தின் போது இது குறித்து ஆராயப்பட்டுள்ளது. காணொளி தொழில்நுட்பம் மூலம் இந்த கூட்டம் நடைபெற்றது.
100 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3,000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன, எனவே அவற்றை திறப்பதற்கான சாத்தியம் குறித்து முதலில் ஆராயப்பட்டது.
அதன்படி, இது தொடர்பாக அவசர பரிந்துரைகளை வழங்க சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்ப குழுவை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பாடசாலை திறக்கப்படாததால் சுமார் 700,000 குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி இழப்பு மற்றும் இதேபோன்ற எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு முன்பள்ளி கல்வி இழப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இந்த விவாதத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.