நேற்று முன்தினம் பிரித்தானியாவிலுள்ள பல்பொருள் அங்காடியில் இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியானார், மூவர் காயமடைந்தனர்.
முதன்முறையாக அந்த பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளதோடு, கொன்றவர் மற்றும் கொல்லப்பட்டவர் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
தென் வேல்ஸிலுள்ள Pen-y-Graig என்ற பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்க மக்கள் வரிசையில் நிற்கும்போது, திடீரென தாக்குதல் நடத்திய அந்த பெண்ணின் பெயர் Zara Anne Radcliffe (29) என்று தெரியவந்துள்ளது.
அவர் கத்தியால் குத்தியதில் உயிரிழந்தவர் அப்பகுதியில் தேவாலய வார்டனாக இருந்த John Rees (88) என்பவராவார்.
தாக்கப்பட்டவர்களில் மற்றவர்கள் என்.ஹெச்.எஸ் செவிலியரான Lisa Way (53), ஓய்வூதியரான Andrew Price (68) மற்றும் பெயர் வெளியிடப்படாத இன்னொருவர் ஆவர்.
இதற்கிடையில், Zara மன நல மருத்துவமனையில் ஐந்து மாதங்கள் சிகிச்சை பெற்றுவந்ததும், நாடு ஊரடங்குக்கு செல்வதற்கு முன், அதாவது ஆறு வாரங்களுக்கு முன்தான் மருத்துவமனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதும் அவரது உறவினரான Donna Evans (33) என்பவர் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரான John Rees, ஒவ்வொரு வியாழன் இரவு 8 மணிக்கும், என்,ஹெச்.எஸ் ஊழியர்களை கவுரவிப்பதற்காக தேவாலய மணியை ஒலிப்பது வழக்கம்.
ஆனால் இன்று இரவு, John Reesஐ கவுரவிப்பதற்காக கிராம மக்கள் தேவாலய மணியை ஒலிக்க இருக்கிறார்கள்!