உக்ரைன் நாட்டில் தற்போதைய நிலவும் நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) டெல்லியில் நேற்று சனிக்கிழமை (19-03-2022) நடைபெற்ற 14-வது இந்தியா- ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
உக்ரைன் மீதான ரஷ்ய துருப்புகள் தாக்குதல் மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து இரு தலைவர்களும் தீவிர கவலை தெரிவித்ததாகவும், வன்முறைக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்க பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தி உள்ளதாக அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் நிலவும் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கோரிக்கை விடுத்தாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பிரதமர் மோடியுடன் கூட்டாக செய்தியாளர்களிடம் சந்தித்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் சர்வதேச ஒழுங்கின வேர்களை அசைத்து விட்டது என தெரிவித்தார்.
ரஷ்யா -உக்ரைன் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.