மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் மற்றும் வட்டிக்கு அதிக சதவீதத்தை ஒதுக்கும் உலகின் முதல் நாடாக இலங்கை மாறியுள்ளது என நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளை 27 (02) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதற்கமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 71.7 சதவீதம் கடன் தேவைக்காக ஒதுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டில் 14.15 ட்ரில்லியன் ரூபாயாக இருந்த கடன் தொகை தற்போது 19.4 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதென நிதி அமைச்சர் அலி சப்ரிமேலும் தெரிவித்துள்ளார்.