சஜித்தின் எரிபொருள் கப்பல் வந்தால் அமைச்சு பதவியை துறக்க தயார் என அமைச்சர் ஹரின் சவால் விடுத்துள்ளார்.
மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார்.
இதன்போது நாட்டின் நலன் கருதி இதனை அவர் செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
சவால்
மேலும் சஜித் பிரேமதாச, அவ்வாறு எரிபொருளைக் கொள்வனவு செய்தால் அமைச்சு பதவியை துறந்துச்செல்ல தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
இதேவேளை நெருக்கடியான சூழ்நிலையிலும் எதிரணிகள், அரசியல் நடத்துகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.