சிங்கப்பூரில் (Singapore) பணிபுரியும் இலங்கை (Sri Lanka) பணிப்பெண்கள் ஏமாற்றப்படும் அபாயம் உள்ளதாக அந்தநாட்டின் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் (K. Shanmukham) தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பணிபுரியும் 500 புலம்பெயர்ந்த பணிப்பெண்கள் கடந்த ஆண்டு மோசடிகளில் சிக்கியுள்ளனர். இந்நிலையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2022இல் பதிவான 423 மோசடிகளுடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும்.
மோசடிகள் தொடர்பான தெளிவூட்டல்
சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வீட்டுப் பணியாளர்கள் இந்தியா (India), இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வருகிறார்கள்.
இந்தநிலையில், சிங்கப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊழல் எதிர்ப்பு கல்வி தொடர்பான ஊட்டல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மனிதவள அமைச்சகத்தின் கட்டாய தீர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தொழிலாளர்கள் பின்பற்றக்கூடிய நடவடிக்கைகள் கற்பிக்கப்படுகின்றன.
2023ஆம் ஆண்டிற்கான வருடாந்த மோசடி புள்ளிவிபரங்களின் படி, அதிகபட்சமாக 46,563 மோசடிகள் பதிவாகியுள்ளன. ” என சுட்டிக்காட்டியுள்ளார்.