முகத்திற்கு ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆவி பிடிப்பதால் நன்மைகள்
ஆவி பிடிப்பதால் சரும துளைகள் திறந்து, அடைப்பட்டுள்ள எண்ணெய் மற்றும் அழுக்கு வெளியேறுவதுடன், முகப்பருக்களும் குறையும்.
மேலும் சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், இறந்த சரும செல்கள் நீங்கி, புதிய செல்கள் வளர்ச்சிக்கு
சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருப்பதுடன், மூக்கில் உள்ள சளி வெளியேறுகின்றது. இருமல் குறைவதுடன், தலைவலியும் தீரும்.
ஆவி பிடிப்பதால் சைனஸ் குழிவுகளில் உள்ள சளி தளர்ந்து வெளியேறும். சைனஸ் பிரச்சினையும் குறைகின்றது.
ஆவி பிடிக்கும் முறை
பாத்திரம் ஒன்றில் சிறிதளது நீரை எடுத்து அதனை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும். அதனுள் புதினா, துளசி, வேப்பிலை போன்ற மூலிகைகளை சேர்த்து சேர்க்கலாம்.
ஒரு துண்டு அல்லது போர்வையை போர்த்திக் கொண்டு, பாத்திரத்தின் மேல் முகத்தை வைத்து ஆவி பிடிக்கவும். இதே போன்று 15 அல்லது 20 நிமிடம் செய்ய வேண்டும்.