தவறு செய்தவர்கள் மறைந்திருக்க தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன அதிகாரத்தில் இருக்கும் போது கூறியவை அனைத்தும் பொய், தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் பொய்களையே கூறுகிறார் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.