கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றள்ளது.
கிளிநொச்சி திருநகர் தெற்கு பகுதியில் தனது வீட்டு பண்ணையை சுத்திகரித்து கொண்டிருந்த போது பண்ணைக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்பில் ஏற்பட்ட ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கி குறித்த இளைஞன் பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் 28 வயதான மங்களதேவன் விஜயகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மாட்டு பண்ணை ஒன்றை நடாத்தி வந்துள்ள நிலையில் இன்று காலை பண்ணையை நீரினால் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச் சென்ற போதும் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவான குறித்த இளைஞன், பெரும் முதலீட்டாளராக வரவேண்டும் என்கின்ற எண்ணத்தில் பல்கலைக்கழக கல்வியை நிறுத்தி சுயதொழில் முயற்சியாளராக மாறியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.