இலங்கையிலுள்ள அனைத்து வங்கி கட்டமைப்புகளும் ஹெக்கர்களின் வலையமைப்பாக மாறியுள்ளதாக நேற்று வெளியான தகவல் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வங்கிகளின் கட்டமைப்புகளிலும் ஹெக்கர்கள் ஊடுருவியுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை சரிப்பார்த்துக்கொள்ளுமாறும், ATM இயந்திரங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் செய்திகள் பரவின.
எனினும் இதுவொரு போலியான தகவல் என இலங்கை க்லியர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுப்படுத்தியுள்ளது.
அது தொடர்பான அறிக்கையில்,
“பல்வேறு குழுவினரால் பல்வேறு நோக்கத்துடன் அவ்வாறான போலித் தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்படுகின்றன.
இது நிதி துறையின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக எவ்வித கொள்கைளும் அற்ற நபர்களினால் பரப்பும் போலித்தகவலாகும்.
இலங்கை ATM கட்டமைப்புகளுக்கு எவ்வித ஆபத்துகளும் இலல்லை. ATM சேவை பாதுகாப்பாக உள்ளது என அனைத்து வங்கிகளும் உறுதி செய்துள்ளது” என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.