இம்முறை வெளியான க பொ த உ த பரீட்சையில் திருகோணமலை மாவட்ட ரீதியாக முதல் இடத்தை பிடித்த மாணவி முஸாதிக்காவின் தந்தையின் அன்பான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
தனது அன்பு மகள் முஸாதிகா மாவட்ட மட்டத்தில் முதலாம் பிள்ளையாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மகிழ்ச்சியின் மறுபக்கத்தில் தனது வங்கிக்கணக்கு இலக்கத்துடன் முகநூலில் உதவி கேட்டு பரவும் செய்தி தொடர்பாக தொடர்பில் அவர் பெரும் கவலை அடைந்துள்ளார்.
அத்துடன் அது தன்னுடைய கணக்கிலக்கம் இல்லை என்றும் கூறும் அவர் உதவி செய்கிறோம் என்று ஒருவரின் சுய கெளரவத்தில் விளையாட வேண்டாம் என கவலை வெளியிட்டுள்ளார்.
தனது சீவனும் ஆரோக்கியமும் உள்ளவரை இறைவனின் துனையுடன் தனது காய்ச்சிப்போன கரங்களை நம்பும் அவர்,உலகமே பார்க்கும் வகையில் தங்களுக்காக உதவி கோரப்படுவதில் அவருக்கும் அவரின் மகள் உற்பட அவர்களின் குடும்பத்திற்கு எள்ளளவும் விருப்பமில்லை என்பது தெரிகிறது.
மகளின் எதிர்காலத்திற்கு உதவி தேவைப்படினும் அவர்கள் அதற்காக விளம்பரப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
கஷ்டத்திலும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்காத பண்பானது ஒர் இஸ்லாமிய வழிமுறையாகும்.
(அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.