கண்டி, உடபளாத்த பிரதேசத்துக்குட்பட்ட கம்பளை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் நிலையம், எந்தவொரு பராமரிப்பின்றியும் நீண்டகாலமாக காணப்பட்டு வந்தது.
குறித்த பஸ் தரிப்பிடம், எந்தவொரு பராமரிப்பும் இன்றி பழுதடைந்து காணப்படுவதாக, ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது.
எனினும் சம்பந்தப்பட்டவர்கள் அது தொடர்பில் கவனமெடுக்கவில்லை.
இந்த நிலையில், ஜனாதிபதியின், “நாட்டின் சூழலை சுத்தமாக வைத்திருப்போம்” எனும் செயற்றிட்டதின் கீழ், இளைஞர்களால் சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் குறித்த பஸ் நிலையத்தில் , தற்போது சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக பிரதேசவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.