அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பிரதமரால் சூறையாடப்படும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒரு புதிய அரசியலமைப்பின் தேவை இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம் என்றும், அது புதிய அரசியலமைப்பாக இருக்கலாம், அல்லது அது அரசியலமைப்பு சீர்திருத்தமாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் கைக்கு நிறைவேற்று அதிகாரத்தை கொடுக்கிறோம், ஆனால் பாராளுமன்றம் அந்த நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியை கொள்ளையடிக்கிறதாகவும் குறிப்பிட்ட அவர் ,அது தான் கடந்த அரசியலமைப்பு நிறுத்தங்களில் நடைபெற்றுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.