அமெரிக்க ராணுவ தளத்தில் ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இதில் அமெரிக்காவை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தகவலை பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரி Newsweek பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஈராக் நாட்டு தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் உள்ள அல் ஆசாத், இர்பில் விமானப்படை தளங்கள் மீது 10- க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த திடீர் தாக்குதலில் இதுவரை அமரிக்காவை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
இதனிடையில் அமெரிக்க ராணுவ பாதுகாப்பு மூத்த செயலாளர் Mark Esper மற்றும் Gen Mark Milley ஆகியோர் Pentagon-க்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சுலைமானியின் மரணத்திற்கு நிச்சயம் பழி தீர்க்கப்படும் என ஈரான் அரசு உறுதி பூண்டுள்ளது.
மேலும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை தீவிரவாத அமைப்பாக அறிவித்து ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: Senior Defense Department official tells @Newsweek Zero US casualties at the moment. News came in at 8:28 p.m. EST #IranAttacks
— James LaPorta (@JimLaPorta) January 8, 2020