ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையோ அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
19 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கி பிரதமருக்குள்ள அதிகாரத்தை தன்வசப்படுத்த முயல்கிறார் கோட்டாபய.நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற்று மீளவும் நிறைவேற்று அதிகாரத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே அவரின் செயற்பாடுகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.
இதனால் மகிந்த -கோட்டாபய இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.தமக்கிடையேயான மோதலை நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையாக காட்ட முயல்கின்றனர்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முதலில் நாடாளுமன்றை கூட்டவேண்டும். இதைவிடுத்து கடைகளில் ஜனாதிபதி அமர்ந்து கொண்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.