லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பிய போயிங் 777 விமானம், ஒரு தொடக்கப் பள்ளியில் எரிபொருளை கொட்டியதால் 17க்கும் அதிகமான குழந்தைகள் படுகாயமடைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங் 777 விமானம் அவசரமாக தரையிறங்க வேண்டியதை அடுத்து, உள்ளூர் நேரப்படி மதியம் 12:30 மணியளவில் Cudahy பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் எரிபொருளை வெளியேற்றியுள்ளது.
அந்த சமயத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அதிகமானோர் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்துள்ளனர்.
இதில் 17 குழந்தைகள் உட்பட 26 பேர் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் மற்றும் துணை மருத்துவர்களும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
DELTA flight 89 to Shanghai dumping fuel, returning to LAX W/ unknown emergency pic.twitter.com/UQVnRuc0IA
— Matt Hartman (@ShorealoneFilms) January 14, 2020