இலங்கை ரயில் சேவையானது 2019ஆம் ஆண்டில் 800 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
ரயில் திணைக்கள ஊழியர்களுக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெற்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச போக்குவரத்து துறை தொடர்பில் மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் ரயில் சேவையின் வளர்ச்சிக்கு ஊழியர்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பழைய ரயில் வண்டிகளை புதுப்பிக்கும் பணிகளை ஊழியர்களுக்கே வழங்குதல், பயனற்ற சில அதிகாரிகளை நீக்குதல் மற்றும் புதிய அதிகாரிகளை நியமித்தல், சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய சொகுசு ரயில் சேவையைத் தொடங்குவது போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன