தேசிய கீதத்தை தமிழில் பாடுவதை விட பாரிய பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு உள்ளன என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய அரசாங்கம் தமிழில் தேசியக்கீதத்தை முன்னுரிமை படுத்தியமை தவிர வேறு எதனையும் தமிழர்களுக்காக செய்யவில்லை.
இந்த நிலையில் தமிழில் தேசியக்கீதம் என்ற விடயத்தை விட பாரிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன.
பெரும்பாலான நாடுகளில் அந்த நாடுகளில் பெரும்பான்மையினராக உள்ள மக்கள் பயன்படுத்தும் மொழியிலேயே தேசியக்கீதம் பாடப்படுகிறது.
தேசியக்கீதத்தின் அர்த்தத்தை அதனை பாடுபவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் குற்றத்தன்மைகளை பொறுத்தே விடுதலை தொடர்பான முனைப்புக்கள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அரசாங்கத்தின் அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் இடம்பெறாமைக்கான காரணம் மக்கள் உரியவர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்யாமையாகும் என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.