சிறைச்சாலை சட்டத்திற்கு அமைய சிறைச்சாலைக்குள் நடந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மெகசீன் சிறைச்சாலையின் பீ. விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தனக்கு மெத்தை ஒன்றை வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என தெரியவருகிறது.
இதனையடுத்தே சிறைச்சாலை சட்டத்திற்கு அமைய நடந்து கொள்ளுமாறு அதிகாரிகள் அவருக்கு அறிவித்துள்ளனர்.
மெத்தை அவசியம் என்றால், அதனை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். எனினும் மருத்துவர்கள் அவ்வாறான பரிந்துரை எதனையும் செய்யவில்லை என தெரியவருகிறது.
அதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவை பார்க்க அரசியல்வாதிகள் எவரும் நேற்று சிறைச்சாலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
அவரது உறவினர்கள் சிலர் மாத்திரம் நேற்று சிறைச்சாலைக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.


















