இந்தியாவில் முதலாமாண்டு திருமண நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகரை சேர்ந்தவர் பைசன் (21). இவருக்கும் ஷப் நகூர் (21) என்ற பெண்ணுக்கும் ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் முதலாமாண்டு திருமண நாள் வந்தது.
அப்போது மனைவியை செல்போன் சார்ஜர் ஒயரால் கழுத்தை நெரித்து கொலை செய்த பைசன் பின்னர் இரயிலில் ஏறி சென்றுள்ளார்.
வேகமாக இரயில் சென்று கொண்டிருந்த போது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் விசாரணையை தொடங்கினார்கள். பைசன் தந்தை தில்ஷத் இது தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், என் மருமகள் ஷப் நகூருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. இதையறிந்த என் மகன் அவரை கண்டித்து வந்தார்.
ஷ்ப் நகூர் பலரிடம் போனில் பேசிய ஓடியோ ஆதாரத்தை கூட பைசன் வைத்திருந்தார்.
அதே போல தினமும் மாமிசம் சாப்பிட ஷப் நகூர் விரும்புவார், ஆனால் நாங்கள் அதிகம் காய்கறிகள் தான் சாப்பிடுவோம், இது தொடர்பாக அவர் சண்டையிட்டு வந்தார் என கூறியுள்ளார்.
பொலிசார் கூறுகையில், கொலை நடந்த போது தனக்கு ஏன் திருமண நாள் பரிசு வாங்கி வரவில்லை என கூறி ஷப் நகூர் கணவரிடம் சண்டை போட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் மனைவியை கொன்றுவிட்டு பைசன் தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.


















