இன்றுள்ள பலருக்கும் பிடித்த பானமாக எலுமிச்சை பழச்சாறு இருந்துள்ளது. இவற்றை குடிப்பதன் மூலமாக பல நன்மைகள் கிடைக்கிறது.
ஆனால் தற்போது வெளியான ஆய்வுகளின்படி எலுமிச்சை பழத் தோலை கொதிக்க வைத்து அந்த நீரை பருகினால் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று தெரியவருகிறது.
இதன் மூலமாக பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி சுட வைத்து பின்னர், அதில் எலுமிச்சம் பழத் தோலை கொண்டு நன்றாக கொதிக்கவிடவும். எலுமிச்சை பழத்தின் தோலை போட்டு மூன்று முதல் 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் சுமார் 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் நீரை ஆறவைத்து, வடிகட்டி ஒரு டம்ளர் தேனுடன் சேர்ந்து குடிக்க வேண்டும். இந்த பானத்தை குடிப்பதால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும்.
தினமும் வெறும் வயிற்றில் இதனை குடித்தால் உடலுக்கு நல்ல சுறுசுறுப்பானது கிடைக்கும், செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு செரிமானப் பிரச்சனைகள் சரியாகும். இதனைப் போன்று உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
இந்த பானத்தை குடித்து வந்தால் நமது உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலானது சுத்தப்படுத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அகற்றப்படுகிறது. இதனால் உடல் நலம் மேம்படுகிறது.