ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி ரணவக்க கொழும்பு குற்றவியல் பிரிவில் இன்று வாக்குமூலமளித்துள்ளார்.
அத்துடன், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி தம்மிகா ஹேமபாலவிடமும் கொழும்பு குற்றவியல் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்துக் கொள்ளவுள்ளது.
சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து வாக்குமூலங்களை பதிவு செய்துகொள்ளுமாறு சட்டமா அதிபர் கடந்த 16 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.