கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் நேற்று முதலாம் இரண்டாம் வருட மாணவர்கள் இடையே இடம் பெற்ற தாக்குதலில் இரு முதலாம் வருட மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பகிடிவதையை எதிர்த்து செயற்பட்ட மாணவர்கள் இருவர், மூத்த மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட மாணவர்களை ஏற்றிச்செல்ல வந்த நோயாளர் காவு வண்டியையும் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்காமல் மூத்த மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு பல்கலைகழகத்தின் முதலாம் வருட மாணவர்களே, இரண்டாம் வருட மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
பகிடிவதைக்கு எதிராக அமைப்பொன்றை உருவாக்கி, முதலாவம் வருட மாணவர்கள் சிலர் செயற்பட்டனர். அந்த அமைப்பின் இரண்டு மாணவர்கள் இன்று கடுமையாக தாக்கப்பட்டனர்.
தாக்கப்பட்ட மாணவர்களை ஏற்றிச்செல்ல நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டபோதும், இரண்டாம் வரு மாணவர்கள் பல்கலைகழக நுழைவாயிலை பூட்டி, நோயாளர் காவு வண்டி உள்நுழைய முடியாத வண்ணம் தடையேற்படுத்தினர்.
பின்னர், பல்கலைகழகத்தின் பின் பகுதியால் காணமடைந்த மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால் பல்கலைகழகத்தில் சில மணித்தியாலங்கள் பதற்றம் நிலவியது.
கலைகலாசார பிரிவின் மாணவர்கள் சிலருக்கு உடனடி வகுப்புத்தடை விதிக்கப்படுவதாகவும், முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.