அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து உக்ரேனிய அதிபரை மிரட்டிய குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு , எதிரான விசாரணகளின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.
100 செனற்றர்கள் அடங்கிய சபையில் டிரம்ப் குறித்த விசாரணை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக 67 பேர் வாக்களித்தால் அவர் அதிபர் பதவியை இழந்துவிடுவார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பிறகு, அமெரிக்க வரலாற்றிலேயே பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் அமெரிக்க அதிபர்கள் வரிசையில் டிரம்ப் மூன்றாவது நபராக விளங்குகிறார்.
இதேவேளை செனட் சபை டிரம்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் வெற்றிபெறாது எனவும் நம்பப்படுகிறது.
இந்நிலையில் டிரம்ப் தொடர்பான தீர்ப்புக்கு உலக அரங்கமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.