விளக்ககமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய அவர் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையின் கதவுகளை மூடி, ஒருவரையும் அந்த பகுதிக்கு செல்ல முடியாத வகையில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க நாளாந்தம் இரண்டு முறை உடற்பயிற்சி செய்வதற்காக மாத்திரம் சிறை அறையில் இருந்து வெளியே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, தொலைபேசி உரையாடல் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைய ரஞ்சன் ராமநாயக்கவை அரச பகுப்பாய்வாளரிடம் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில் அந்த நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.