வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்றிரவு (24) இரவு 8.00 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் நான்கு இளைஞர்ளை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சா பரிமாற்றம் இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையனருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் புதிய பேருந்து நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நான்கு இளைஞர்களை சோதனைக்குட்படுத்தினர்.
இதன் போது கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த வவுனியா கோவிற்குளம் , ஈரட்டைபெரியகுளம் பகுதியினை சேர்ந்த 35,33,32,28 வயதுடைய நான்கு இளைஞர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இவர்களிடமிருந்து 40கிராம் , 20கிராம் ,20கிராம் ,20கிராம் வீகிதம் 100 கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் வவுனியா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.