கர்நாடகாவை சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதற்கான பின்னணி காரணம் வெளியாகியுள்ளது.
இந்திய அரசு கடந்த 25ம் திகதி பத்ம விருதுகளை அறிவித்தது, அதில் கர்நாடகாவை சேர்ந்த தட்சிணா கன்னடா பகுதியை சேர்ந்த வரரேகலா ஹஜப்பா என்பவரும் ஒருவர்.
சாதாரண பழ வியாபாரியான ஹஜப்பா தனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறித்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
படிக்கும் வாய்ப்பை இழந்த இவர் தனது கிராமத்தில் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக தெரு தெருவாக ஆரஞ்சு பழம் விற்ற காசை கொண்டு பள்ளிக்காக நிலம் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து 2000ம் ஆண்டில் ஹஜப்பாவின் முயற்சியால் பள்ளி அமைக்கப்பட்டு ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இதனை பாராட்டும் பொருட்டு மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.