ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்கு நன்மை பயக்கும் பயணமொன்றை மேற்கொள்ள முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை ஹிகுரக்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதக்காலப் பகுதியில் புதிய ஜனாதிபதிக்கு சிறந்த பயணம் ஒன்றை மேற்கொள்ளும் அவசியம் உள்ளதை காணக்கூடியதாய் உள்ளதாகவும் அதற்கு நாம் அனைவரும் ஆதரவளிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நாட்டை நேசிக்கும், இந்நாட்டு குழந்தைகளை நேசிக்கும், மனிதர்களை நேசிக்கும் மனித நேயம் மிக்க மனிதர்கள் இருப்பார்களாயின், அரசியலிலும் அரச சேவையிலும் அனைத்து இன பேதங்களையும் மறந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளா.