டெல்லியில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி செல்ல முயன்ற போராட்டகாரர்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமிய மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது கொந்தளிப்பை ஏற்படுத்தியது நினைவுக் கூரத்தக்கது. சிஏஏ-க்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்ததில் பல உயிரிழந்தனர்.
குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேச மாநிலத்தில் பலர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், சிஏஏ-க்கு எதிராக டெல்லி ஜாமிய மில்லியா பல்கலைக்கழகத்திற்கு வெளியே கூடிய போராட்டகாரர்கள் பேரணிச் செல்ல தயாராக இருந்தனர்.
அப்போது, சம்பவயிடத்தில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர், போராட்டகாரர்களுக்கு எதிராகவும், டெல்லி பொலிஸிக்கு ஆதரவாகவும் கோஷமிட்டு, கூடியிருந்த போராட்டகாரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளாார்.
Police watch as a guy waves a gun outside Jamia University. Man says "Yeh lo azaadi." This week a minister chanted – desh ke gaddaron ko, goli Maro saalon ko. pic.twitter.com/19mfHvFcQR
— Niha Masih (@NihaMasih) January 30, 2020
இச்சம்பவத்தை சற்று தொலைவில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் படை வேடிக்கை பார்த்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் போராட்டகாரர் ஒருவர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனயைடுத்து, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் குறித்த தகவல் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
இச்சம்பவத்தையும் அடுத்தும் போராட்டகாரர்கள் சிஏஏ-க்கு எதிராக பேரணியாக சென்றனர்.