தமிழகத்தில் அதிகாலை நேரத்தில் இளம் பெண் ஒருவர் துணியில்லாமல் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னையில் இருக்கும் ராயப்பேட்டையில் மக்கள் நடமாட்டம் எந்த நேரத்திலும் ஆங்காங்கே இருக்கும், இதன் காரணமாக பொலிசார் அப்பகுதியில் அடிக்கடி ரோந்து பணியிலும், விழிப்புடனும், தீவிர கண்காணிப்பிலே இருப்பர்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று, புதுக்கல்லூரி அருகே அதிகாலை உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், ஒட்டு துணி இல்லாமல் நடந்து சென்றுள்ளார்.
இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் உடனடியாக இது குறித்து தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க, அதன்படி ராயப்பேட்டை உதவி ஆய்வாளர் ஜெயராமன் விரைந்து வந்து கையில் கொண்டுவந்திருந்த துணியை எடுத்து நடந்து வந்த இளம்பெண்ணுக்கு போர்த்திவிட்டார்.
அதன் பின் குறித்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர் தெலுங்கில் பேசியுள்ளார். தெலுங்கை தவிர அவருக்கு வேறு எந்த மொழியும் தெரியவில்லை.
கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று இருந்துள்ளார். பொலிசார் விசாரித்து கொண்டிருந்த போது, அவர் திடீரென்று வயிறு வலிப்பதாக கூறி தொடர்ந்து அழுதுள்ளார்.
இதனால், பொலிசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், பாதுகாப்புக்காக அரசு பெண்கள் காப்பக நிர்வாகிகள் அந்த பெண்ணுடனேயே தங்கி உள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்படவுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். மேலும், இந்த நேரத்தில்
இந்த கோலத்தில் அவர் எப்படி வருவார்? யாராவது கடத்தி வந்தார்களா? பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்ற பல கோணங்களில் விசாரனை மேற்கொண்டு வரும் பொலிசார், அந்த பெண் நடந்து வந்த பகுதியில் உள்ள சிசிடிவி கமெராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.