அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று வனத்தில் பறக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கொலம்பிய நகரமான மெடலின் மீது பறந்து கொண்டிருந்த விவா ஏர் என்ற வணிக விமானத்தின் அருகே, ஒரு மர்மமான மூன்றடுக்கு பொருள் மேகத்தின் வழியே பறந்து செல்லும் வீடியோ காட்சி இணையதளவாசிகளை குழப்பமடைய வைத்துள்ளது.
ஜனவரி 31 அன்று யூடியூப் சேனலான யுஎஃப்ஒமேனியாவில் வெளியிடப்படுவதற்கு முன்பு, இந்த வீடியோ முதலில் CesarinMP என்கிற டிக்டோக் கணக்கில் வெளியிடப்பட்டிருந்தது.
இதனை விமானத்தை இயக்கிக்கொண்டிருந்த விமானி எடுத்ததாக கூறப்படுகிறது.
அசல் வீடியோவுக்கு எந்த வர்ணனையும் இல்லாத நிலையில், யூடியூப் பார்வையாளர்கள் மர்மமான பொருள் என்ன என்பது குறித்து பல்வேறு யூகங்களை தெரிவிக்கின்றனர்.
ஓரு சிலர் அது வேற்றுகிரகவாசிகளுக்கு சொந்தமான பறக்கும் தட்டு எனவும், வேறு சிலர் சிஜிஐ கலைஞரின் வேலை என்றும் கூறுகிறார்கள்.
இது இராணுவப் பயிற்சிகள் என்று கூறி பொதுமக்களை ஏமாற்ற அதிகாரிகள் முயற்சிப்பார்கள் என்று ஒரு இணையதளவாசி கூறியுள்ளார்.
முன்னதாக இதேபோன்று உண்மையில் ரகசிய க்யூப் போன்ற பொருள்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி தோன்றி வருவது குறிப்பிடத்தக்கது.



















