விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.
சித்த ஆயுர்வேத வைத்தியத்தில் விளாம்பழம் அதிகம் பயன்படுத்தபடுகிறது.
விளாம்மரத்தின் பட்டை, இலை, பழம் உள்ளிட்டவை உடலுக்கு பயனுள்ளதாக விளங்குகிறது.
அதுமட்டுமின்றி இப்பழத்தில் விட்டமின்கள் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃபோளவின்), பி3(நியாசின்) போன்றவையும், தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம், குரோமியம், மாங்கனீஸ், துத்தநாகம் போன்றவையும், புரோடீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்சத்துக்கள் ஆகியவையும் காணப்படுகின்றன.
ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்ற இந்த பழத்தை உட்கொள்ளுவதனால் உடலில் உள்ள சில நோய்களுக்கு தீர்வு அளிகின்றது.
அந்தவகையில் தற்போது விளாம்பழத்தில் அடங்கியுள்ள நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- ஆயுளை நீட்டிக்கச் செய்யும். சிறுவர்களுக்கு அடிக்கடி விளாம்பழத்தை கொடுத்து வர அறிவு வளர்ச்சியடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் ஏற்படும்.
- விளாம்பழம் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். நல்ல பசியை ஏற்படுத்தும்.
- வயதானவர்கள் விளாம்பழம் உண்டு வந்தால், அவர்களுக்கு ஏற்படும் ‘ஆஸ்டியோபெரோஸிஸ்’ என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப்பார்க்காது. பற்கள் கெட்டிப்படும். நல்ல ஜீரண சக்தியைத் தரும்.
- இரத்தத்தை விருத்தி செய்யும். பழுக்காத விளாங்காயைத் தண்ணீர் விட்டு அவித்து, அதை உடைத்து, உள்ளே உள்ள சதையை எடுத்து காலை வேளையில் மட்டும் ஐந்து நாள்வரை தொடர்ந்து கொடுத்து வந்தால், சீதபேதி குணமடையும்.
- வெறும் பேதியைகூட நிறுத்திவிடும். இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். நரம்புகளுக்கு வலிமை தரும். இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கும்.
- ஒரு அவுன்ஸ் விளாம்பழத்தில் பி-2 உயிர்சத்து இருக்கிறது. இந்த உயிர்சத்து நரம்புகளுக்கும், இதயத்திற்கும் பலமளிக்கும்.
- விளாப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
- சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட, ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.
- தினசரி ஒரு பழம் வீதம் 21 தினங்களுக்கு சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும்.
- விளாம்பழத்தில் உள்ள விதைக்கு மட்டுமே பித்தத்தைப் போக்கும் சக்தி உண்டு. அந்த குறிப்பிட்ட விதை மற்றவருக்குப் போய்விட்டால், பித்தத்தைப் போக்க பழம் சாப்பிடுபவர் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.